Sorry, you need to enable JavaScript to visit this website.
Skip to main content
Tansi-TN

சிறப்பு பணிகள்

வாக்குப்பெட்டிகள் தயாரித்தல் மற்றும் வழங்குதல், ஊட்டமளிக்கும் மதிய உணவுத் திட்டத்திற்கான சமையல் கருவிகள், பள்ளிகளுக்கான கரும்பலகைத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தமிழ்நாடு மின்சார வாரியம், தளவாடங்கள் பல்வேறு முக்கிய மற்றும் அவசர அரசுத் திட்டங்களுக்கான பொருட்களை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து வழங்கி நிறைவேற்றுவதில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. புதிய சட்டமன்றக் கூடத்திற்கு 2008-09 மற்றும் 2009-10 ஆண்டுகளில் தேவையான மர அறைகலன்களை தயாரித்து வழங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலம் முறையே ரூ.69 கோடி மற்றும் ரூ.46 கோடிக்கு மேஜை, நாற்காலி, நிண்ட/குட்டையான இருக்கைகள் வழங்கியுள்ளது. முழு பணியினையும் நல்ல முறையில் குறிப்பிட்ட காலத்தில் முடித்திருந்ததால், இவ்வாண்டும் ரூ.46 கோடி மதிப்புள்ள பணி ஆணைகளை எதிர்பார்க்கிறோம்.

ரூ.10 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் புதிய சட்டமன்றக் கூடத்துக்கான மர அறைகலன்களை செய்து வழங்குவதற்கான மதிப்புமிக்க பணி ஆணைகளை தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் பெற்று முடித்துள்ளது.

‘ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகரன் யோஜனா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து “டர்ன்கீ” ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் மின்சார இணைப்பு பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதற்காக ரூ.250 கோடி மதிப்பிலான பணியாணைகளை தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி) எஃகு மற்றும் மர அறைகலன்களை தயாரித்து அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.  டான்சி 1965ஆம் வருடம் நிறுவப்பட்டது.  தமிழ்நாடு முழுவதும் தற்போது கீழ்க்கண்டுள்ளவாறு 20 தொழிற்கூடங்களும் மற்றும் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் இரு காட்சியகங்களும் உள்ளன:

பொறியியல் தொழிற்கூடங்கள்                  -           3

மர அறைகலன் தொழிற்கூடங்கள்            -           14

சிறப்பு வகை தொழிற்கூடங்கள்                 -            3

மொத்தம்                                                                -           20

 

1.         உற்பத்தி பொருட்கள்

                டான்சி கீழ்க்கண்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது:

  • பள்ளிகள்கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்குத் தேவையான வகுப்பறை அறைகலன்கள்

  • வீடுகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கான அறைகலன்கள்

  • தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு (TNMSC) தேவையான சர்ஜிகல் ஸ்பிரிட்டை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள்

  • ஸ்பிரிட்டை அடிப்படையாக்க் கொண்டு தயாரிக்கப்படும் தொழில் பொருட்களான காஸ்கெட் ஷெல்லாக்பிரென்ச் பாலிஷ்தின்னர் மற்றும் கிருமி நாசினி கரைசல்களான லைசால்பினாயில்

  • இந்தியா மார்க்-II கைப்பம்புகள் மற்றும் குழந்தைகள் எடை போடும் கருவி

  • எனாமல் மற்றும் சாலை குறியீடு வர்ணங்கள்


 

 

2.    2022-23 ஆம் ஆண்டில் முடிக்கப்பெற்ற குறிப்பிடத்தக்க பணி ஆணைகள்

       (ரூ. 50 இலட்சத்திற்கு மேல்)

 

  • பள்ளி கல்வித் துறைக்கு வழங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் கற்றல் உபகரணங்கள்” - ரூ.21.66 கோடி

  • பள்ளி   கல்வித்   துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.15.21 கோடி

  • உயர் கல்வித் துறைக்குத் வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர              அறைகலன்கள்  ரூ.21.05 கோடி

  • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட எஃகு மாடுலர் கலர் டெஸ்க் மற்றும் பெஞ்சுகள்ரூ.13.96 கோடி

  • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட துத்தநாக உலோக கச்சித தொட்டிகள்ரூ.3.91 கோடி

  • பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள் (நாடாளுமன்ற உறுப்பினர் நிதி) ரூ.1.00 கோடி

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மாடுலர் கலர் டெஸ்க் மற்றும் பெஞ்சுகள்ரூ.6.82 கோடி

  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.1.50 கோடி.

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத் துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.1.15 கோடி.

  • இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ. 61.00 இலட்சம்

3.         2022-23ஆம் நிதி ஆண்டில் உற்பத்தியில் உள்ள பணி ஆணைகள் 

    (ரூ. 50 இலட்சத்திற்கு மேல்)

  • பள்ளி கல்வித் துறைக்கு வழங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் கற்றல் உபகரணங்கள் ரூ.4.00 கோடி

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மாடுலர் கலர் டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் ரூ.8.38 கோடி

  • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.4.15 கோடி

  • தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.1.36 கோடி

  • தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர அறைகலன்கள்ரூ.1.23 கோடி

  • திருநெல்வேலி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட துத்தநாக உலோக கச்சித தொட்டிகள்ரூ. 78.00 இலட்சம்

  • சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு                             நீரகற்று வாரியத்திற்கு வழங்கப்பட்ட எஃகு மற்றும் மர                                 அறைகலன்கள் -  ரூ. 72.00 இலட்சம்

4.         மீண்டும் புதுப்பிக்கப்பெற்ற தொழிற்கூடங்கள்

2022-23ஆம் ஆண்டில், டான்சி ஈரோட்டில் உள்ள மூடப்பட்ட தொழிற்கூடத்தை புதுப்பித்து மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளது.

5.         காட்சியக விற்பனைக்கூடம் மற்றும் நிகழ்நிலை மின் வணிக           இணைய முகப்பு 

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினைத் தொடர்ந்து சென்னை நகரில் டான்சியின் ஒரு பிரத்யேக காட்சியக விற்பனைக்கூடம்  மற்றும் நிகழ் நிலை மின் வணிக இணைய முகப்பு (e-Commerce online sales portal) (www.tansismart.tn.gov.in) நிறுவப்பெற்று 08.02.2023 அன்று மாண்புமிகு குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் திறக்கப்பெற்று செயல்படுகிறது.

6.         அரசு இ-விற்பனை முகமை 

டான்சி நிறுவனம் கடந்த டிசம்பர், 2022 முதல் அரசு -விற்பனை முகமையில் (GeM Portal) பதிவு செய்து கொள்முதல் மற்றும் விற்பனை சேவைகளை மேற்கொண்டுள்ளது.

 

 

 

 

7.         நிறுவன வள திட்டமிடல்

இந்நிறுவனம் தனது தனித்துவமான நிறுவன வள திட்டமிடல் (ERP) மூலம் நிர்வாகம்மனித வளம்பொருள் மேலாண்மைநிதிகணக்குசந்தைப்படுத்துதல்முதலியன உள்ளிட்ட தனது தினசரி நடவடிக்கைகளை 2022-23 ஆம் நிதி ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

8.         நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பங்களிப்பு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் நிறுவப்பெற்ற நம்ம ஸ்கூல்“ அமைப்பிற்கு  டான்சி நிறுவனம் ரூ.4 கோடியினை (நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ்அளித்துள்ளது. 

9.         2022-23ஆம் ஆண்டு டான்சி  நிறுவனத்தின் இலக்கு ரூ.125 கோடி மற்றும் செயல்பாடுகள் 

 

2022-23ஆம் ஆண்டு டான்சியின் செயல்பாடுகள்:

            

விபரம்

ரூ. கோடியில்

(மார்ச்,2023 வரை)

(தணிக்கைக்கு முன்)

உற்பத்தி

137.70

விற்பனை

155.05

நிகர இலாபம் 

9.42

செயல்முறை இலாபம்

7.09